ஈரோடு
ஆப்பக்கூடல் அருகே விஷம் குடித்து பெண் தற்கொலை; குழந்தை இல்லாத ஏக்கத்தில் விபரீத முடிவு
|ஆப்பக்கூடல் அருகே குழந்தை இல்லாத ஏக்கத்தில் விஷம் குடித்து பெண் தற்கொலை செய்து ெகாண்டார்.
அந்தியூர்
ஆப்பக்கூடல் அருகே குழந்தை இல்லாத ஏக்கத்தில் விஷம் குடித்து பெண் தற்கொலை செய்து ெகாண்டார்.
இதுபற்றி போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-
விஷம் குடித்த பெண்
அந்தியூர் ஆப்பக்கூடல் புன்னம் அருகே சின்ன மாரியம்மன் கோவில் பகுதியைச் சேர்ந்தவர் தேவராஜ். கூலி தொழிலாளி. அவருடைய மனைவி சங்கீதா (வயது 25). இவர் அந்தியூரில் உள்ள நகைக்கடையில் தொழிலாளியாக பணியாற்றி வந்தார். தேவராஜுக்கும், சங்கீதாவுக்கும் கடந்த 3½ ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது.
ஆனால் 2 பேருக்கும் குழந்தை இல்லை. இதனால் சங்கீதா மனமுடைந்து காணப்பட்டு வந்தார். இந்த நிலையில் அவர் நேற்று முன்தினம் விஷத்தை குடித்துவிட்டு வீட்டில் மயங்கி கிடந்தார்.
சாவு
இதை பார்த்த உறவினர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக அந்தியூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.
பின்னர் ஈரோட்டில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அதன்பின்னர் மேல்சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். அங்கு சங்கீதாவுக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தனர். ஆனால் சிகிச்சை பலனின்றி சங்கீதா நேற்று உயிரிழந்தார்.
இதுகுறித்து ஆப்பக்கூடல் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் சங்கீதாவுக்கு திருமணம் நடந்து 3½ ஆண்டுகளுக்குள் இருப்பதால் கோபி ஆர்.டி.ஓ. திவ்ய பிரியதர்ஷினி மேல் விசாரணை நடத்தி வருகிறார்.