< Back
மாநில செய்திகள்
கிருஷ்ணகிரி
மாநில செய்திகள்
கூலித்தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை
|14 May 2023 12:15 AM IST
தேன்கனிக்கோட்டையில் கூலித்தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
தேன்கனிக்கோட்டை
தேன்கனிக்கோட்டை தாலுகா சந்தனப்பள்ளி அருகே உள்ள எஸ்.குருப்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் முனியப்பா (வயது 75). கூலித்தொழிலாளி. இவர் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு விபத்தில் சிக்கி படுகாயம் அடைந்தார். இதற்காக அவர் தற்போது வரை சிகிச்சை பெற்று வந்தார். இதனால் விரக்தியடைந்த அவர் சம்பவத்தன்று தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து தேன்கனிக்கோட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.