< Back
மாநில செய்திகள்
ராயக்கோட்டை அருகேரெயில் முன் பாய்ந்து இளம்பெண் தற்கொலைதூக்கி வீசியதில் குழந்தை காயம்
கிருஷ்ணகிரி
மாநில செய்திகள்

ராயக்கோட்டை அருகேரெயில் முன் பாய்ந்து இளம்பெண் தற்கொலைதூக்கி வீசியதில் குழந்தை காயம்

தினத்தந்தி
|
9 April 2023 12:30 AM IST

ராயக்கோட்டை:

ராயக்கோட்டை அருகே ரெயில் முன் பாய்ந்து இளம்பெண் தற்கொலை செய்து கொண்டார். அப்போது தூக்கி வீசியதில் குழந்தை காயம் அடைந்தது.

குடும்ப தகராறு

கிருஷ்ணகிரி மாவட்டம் பாலிகானூர் அடுத்த பெல்லம்பள்ளி கிராமத்தை சேர்ந்தவர் நரேஷ் (வயது 24). ஓட்டல் தொழிலாளி. இவரும், தேன்கனிக்கோட்டை தாலுகா தொட்டதிம்மன அள்ளியை சேர்ந்த சாக்கப்பன் மகள் நிவேதா (21) என்பவரும் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு 11 மாதத்தில் கவினேஷ் என்ற ஆண் குழந்தை உள்ளது.

ராயக்கோட்டையில் தங்கியிருந்து தனியார் நிறுவனத்தில் நிவேதா வேலை செய்து வந்தார். இந்த நிலையில் கணவன், மனைவி இடையே அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. நேற்று முன்தினம் மீண்டும் அவர்களுக்கு இடையே தகராறு ஏற்பட்டது.

தற்கொலை

இதனால் மனமுடைந்த நிவேதா தனது குழந்தை கவினேசை தூக்கி கொண்டு வீட்டில் இருந்து சென்றார். பின்னர் ராயக்கோட்டை அருகே பெரிய நாகதுணை ெரயில் நிலைய பகுதியில் நின்று கொண்டிருந்தார். இதையடுத்து இரவில் அவர் திடீரென குழந்தையை தூக்கி வீசி விட்டு அந்த வழியாக வந்த ரெயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார்.

இதில் தூக்கி வீசப்பட்டதில் காயத்துடன் குழந்தை உயிர் தப்பியது. இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்து சென்ற ஓசூர் ரெயில்ேவ போலீசார் குழந்தையை மீட்டு கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்தனர். பின்னர் தற்கொலை செய்து கொண்ட நிவேதாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஓசூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

உதவி கலெக்டர் விசாரணை

திருமணமான 2 ஆண்டுகளில் இளம்பெண் தற்கொலை செய்து கொண்டுள்ளதால் இதுதொடர்பாக ஓசூர் உதவி கலெக்டர் சரண்யா விசாரணை நடத்தி வருகிறார். மேலும் ஓசூர் ரெயில்வே போலீசார் இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்