< Back
மாநில செய்திகள்
தேன்கனிக்கோட்டை அருகேஏரியில் குதித்து சிறுமி தற்கொலை
கிருஷ்ணகிரி
மாநில செய்திகள்

தேன்கனிக்கோட்டை அருகேஏரியில் குதித்து சிறுமி தற்கொலை

தினத்தந்தி
|
7 April 2023 12:30 AM IST

தேன்கனிக்கோட்டை:

தேன்கனிக்கோட்டை அருகே உள்ள இருதுகோட்டை பகுதியை சேர்ந்தவர் 14 வயது சிறுமி. இவர் வாலிபர் ஒருவரை காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. இதை அறிந்த பெற்றோர் சிறுமியை கண்டித்தனர். இதனால் மனமுடைந்த சிறுமி கடந்த 3-ந் தேதி இருதுகோட்டை திருமா நகரில் உள்ள ஏரியில் குதித்து தற்கொலை கொண்டார்.

இந்த நிலையில் சிறுமியின் உடல் நேற்று முன்தினம் ஏரியில் இருந்து மீட்கப்பட்டது. இதுகுறித்து தகவல் அறிந்ததும் தேன்கனிக்கோட்டை போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று சிறுமியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தேன்கனிக்கோட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் செய்திகள்