< Back
மாநில செய்திகள்
நர்சிங் மாணவி, தூக்குப்போட்டு தற்கொலை

அஸ்மிதா

தஞ்சாவூர்
மாநில செய்திகள்

நர்சிங் மாணவி, தூக்குப்போட்டு தற்கொலை

தினத்தந்தி
|
21 March 2023 1:42 AM IST

சேதுபாவாசத்திரம் அருகே தாய் திட்டியதால் மன வேதனை அடைந்த நர்சிங் மாணவி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

சேதுபாவாசத்திரம் அருகே தாய் திட்டியதால் மன வேதனை அடைந்த நர்சிங் மாணவி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

நர்சிங் மாணவி

தஞ்சை மாவட்டம் சேதுபாவாசத்திரம் அருகே உள்ள மருங்கப்பள்ளம் கிராமத்தை சேர்ந்தவர் நீலகண்டன். கூலித் தொழிலாளி. இவருடைய மனைவி அமுதா. இந்த தம்பதியருக்கு அஸ்வந்த்(வயது 21) என்ற மகனும், அஸ்மிதா(19) என்ற மகளும் உள்ளனர். அஸ்மிதா பட்டுக்கோட்டையில் உள்ள ஒரு தனியார் நர்சிங் கல்லூரியில் படித்து வந்தார். நேற்று முன்தினம் காலை வீட்டு வேலை எதுவும் செய்வதில்லை, எப்போதும் டி.வி. பார்ப்பதும், தூங்குவதுமாக இருக்கிறாய் என கூறி அஸ்மிதாவை அவரது தாயார் அமுதா கண்டித்ததாக கூறப்படுகிறது.

திடீர் மாயம்

இதைத்தொடர்ந்து சம்பவத்தன்று மாலை அஸ்மிதா வீட்டில் இருந்து திடீரென மாயமானார். இதையடுத்து பெற்றோர் மற்றும் உறவினர்கள் அவரை பல இடங்களிலும் தேடிப்பார்த்தனர். இந்த நிலையில் நேற்று காலை வீட்டில் இருந்து 1 கிலோ மீட்டர் தொலைவில் சேதுபாவாசத்திரம் சாலையில் உள்ள தென்னந்தோப்பில் இளம் பெண் ஒருவர் தூக்கில் பிணமாக தொங்குவதாக தகவல் கிடைத்தது.

அதன்பேரில் அஸ்மிதாவின் பெற்றோர் அங்கு சென்று பார்த்தனர். அப்போது தூக்கில் பிணமாக தொங்கியது அஸ்மிதா என்பது தெரிய வந்தது. இதுகுறித்து தகவல் அறிந்த சேதுபாவாசத்திரம் போலீசார் அங்கு சென்று அஸ்மிதாவின் உடலை மீட்டு பேராவூரணி அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்து விசாரணை நடத்தினர்.

தூக்குப்போட்டு தற்கொலை

போலீசாரின் முதல் கட்ட விசாரணையில், தாய் திட்டியதால் மனம் உடைந்து அவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டது தெரிய வந்தது. இருப்பினும் அவருடைய சாவுக்கு வேறு ஏதேனும் காரணம் உள்ளதா? என்பது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தாய் திட்டியதால், நர்சிங் மாணவி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டது அந்த பகுதியை சேர்ந்த மக்களிடையே மிகுந்த சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் செய்திகள்