< Back
மாநில செய்திகள்
தூக்குப்போட்டு காவலாளி தற்கொலை
ஈரோடு
மாநில செய்திகள்

தூக்குப்போட்டு காவலாளி தற்கொலை

தினத்தந்தி
|
18 March 2023 3:42 AM IST

தூக்குப்போட்டு காவலாளி தற்கொலை

கடத்தூர்

கோபி அருகே உள்ள அவ்வையார்பாளையத்தை சேர்ந்தவர் ஜோதிமணி (வயது 38). இவர் வேட்டைக்காரன்கோவிலில் உள்ள ஒரு தனியார் மில்லில் காவலாளியாக வேலை செய்து வந்தார். கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு திருமணமான இவர் விவாகரத்து பெற்று தாய் ஈஸ்வரியுடன் வசித்து வந்தார்.

இந்த நிலையில் நேற்று முன்தினம் வீட்டின் விட்டத்தில் சேலையால் ஜோதிமணி தூக்குப்போட்டு கொண்டார். இதை பார்த்த அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக கோபி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். ஆனால் செல்லும் வழியிலேயே ஜோதிமணி இறந்தார்.

மேலும் செய்திகள்