ஈரோடு
சத்தியமங்கலத்தில் 96 வயது முதியவர் தீக்குளித்து தற்கொலை
|சத்தியமங்கலத்தில் 96 வயது முதியவர் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார்.
சத்தியமங்கலம்
சத்தியமங்கலத்தில் 96 வயது முதியவர் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார்.
96 வயது முதியவர்
சத்தியமங்கலம் புளியங்கோம்பையை சேர்ந்தவர் சண்முகம் (வயது 96). இவருடைய மனைவி ராமாத்தாள் (80). இவர்களுக்கு 3 மகள்கள் உள்ளனர். இதில் கடைசி மகள் சரஸ்வதியின் கணவர் இறந்துவிட்டதால் அவர் பெற்றோருக்கு பாதுகாப்பாக இருந்து வருகிறார்.
சண்முகம் கடந்த பல ஆண்டுகளாக மூட்டு வலியால் அவதிப்பட்டு வந்தார். பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றும் குணமாகவில்லை. இதனால் வாழ்க்கையில் வெறுப்படைந்த நிலையில் காணப்பட்டார். வீட்டில் இருந்து குளியலறை சுமார் 50 அடி தூரத்தில் இருந்தது. அதனால் குளியலறைக்கு கூட நடந்து செல்ல முடியாமல் வேதனை பட்டார். இதனால் வாழ்வதை விட இனி சாவதே மேல் என்ற முடிவுக்கு வந்தார்.
தீக்காயத்துடன் கிடந்தார்...
இந்தநிலையில் நேற்று முன்தினம் இரவு 11.30 மணி அளவில் தூக்கம் கலைந்து ராமாத்தாள் எழுந்து பார்த்தார். அப்போது சண்முகத்தை காணவில்லை. இதனால் குளியலறைக்கு ஓடிச்சென்று பார்த்தார். அப்போது உள்பக்கமாக தாழ் போடப்பட்டு இருந்தது. இதனால் மகள் சரஸ்வதியையும், உறவினர்களையும் அழைத்து குளியல் அறையின் கதவை உடைத்து பார்த்தார்.
அப்போது குளியலறைக்குள் தீக்காயங்களுடன் சண்முகம் உயிருக்கு போராடிக்கொண்டு இருந்தார். உடனே அவரை மீட்டு சிகிச்சைக்காக சத்தி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றார்கள்.
பின்னர் மேல் சிகிச்சைக்காக ஆம்புலன்சில் கோைவ அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றார்கள். ஆனால் அவர் இறந்துவிட்டார்
இதுகுறித்து சத்தியமங்கலம் போலீசார் நடத்திய முதல் கட்ட விசாரணையில் மூட்டு வலியை தாங்க முடியாமல் சண்முகம் குளியலறைக்கு சென்று உடலில் மண்எண்ணெயை ஊற்றி தீக்குளித்தது தெரியவந்தது.