< Back
மாநில செய்திகள்
நர்சு தற்கொலை
கிருஷ்ணகிரி
மாநில செய்திகள்

நர்சு தற்கொலை

தினத்தந்தி
|
9 March 2023 12:15 AM IST

ஓசூரில் நர்சு தற்கொலை செய்து கொண்டார்.

ஓசூர்

தர்மபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி தாலுகா சில்லாரஅள்ளியை சேர்ந்தவர் திருப்பதி. இவரது மகள் பவித்ரா (வயது 20). இவர் ஓசூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் நர்சாக பணிபுரிந்து வந்தார். வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்த அவர், சிகிச்சை பெற்றும் குணமடையவில்லை. இதனால் மனமுடைந்து காணப்பட்ட அவர் சம்பவத்தன்று மருத்துவமனையில் வைத்து எலி மருந்தை சாப்பிட்டு விட்டு மயங்கி கிடந்தார். அவரை அருகில் இருந்தவர்கள் மீட்டு தர்மபுரி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக அவர் சேலம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி அவர் நேற்று முன்தினம் பரிதாபமாக இறந்தார். இது குறித்து சிப்காட் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மேலும் செய்திகள்