கிருஷ்ணகிரி
தொழிலாளி உள்பட 2 பேர் தற்கொலை
|கிருஷ்ணகிரி, காவேரிப்பட்டணத்தில் தொழிலாளி உள்பட 2 பேர் தற்கொலை செய்து கொண்டனர்.
கிருஷ்ணகிரி, காவேரிப்பட்டணத்தில் தொழிலாளி உள்பட 2 பேர் தற்கொலை செய்து கொண்டனர்.
தொழிலாளி
கிருஷ்ணகிரி புதுப்பேட்டையை சேர்ந்தவர் முனவர் உசேன் (வயது 58). தொழிலாளி. இவர் குடும்ப பிரச்சினை காரணமாக கடந்த 12 ஆண்டுகளாக தனியாக வசித்து வந்தார். குடும்பத்தை பிரிந்து வாழ்ந்ததால் அவர் மனமுடைந்து காணப்பட்டார். சம்பவத்தன்று அவர் வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இதுகுறித்து அக்கம் பக்கத்தினர் கிருஷ்ணகிரி டவுன் போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
பெண் தற்கொலை
காவேரிப்பட்டணம் அருகே உள்ள பனகமுட்லுவை சேர்ந்தவர் முனிராஜ். இவரது மனைவி அனிதா (27). இவர் வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்தார். இதற்காக பல மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றும் குணமாகவில்லை. இதனால் மனமுடைந்த அவர் விஷம் குடித்து விட்டு வீட்டில் மயங்கி கிடந்தார். அவரை உறவினர்கள் மீட்டு காவேரிப்பட்டணம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.
பின்னர் மேல் சிகிச்சைக்காக கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனையில் அவர் சேர்க்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி அனிதா பரிதாபமாக இறந்தார். இது குறித்து காவேரிப்பட்டணம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.