< Back
மாநில செய்திகள்
கிருஷ்ணகிரி
மாநில செய்திகள்
கடன் தொல்லையால் தொழிலாளி தற்கொலை
|4 March 2023 12:15 AM IST
தேன்கனிக்கோட்டை அருகே கடன் தொல்லையால் தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
தேன்கனிக்கோட்டை
ஓசூர் அருகே உள்ள குடிசாதனப்பள்ளி கிராமத்தை சேர்ந்தவர் முருகேசன் (வயது 38). கூலித்தொழிலாளி. கடன் தொல்லையால் மனமுடைந்து காணப்பட்ட முருகேசன் அஞ்செட்டி சாலையில் உள்ள மரகட்டா அருகே விவசாய நிலத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து தேன்கனிக்கோட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.