< Back
மாநில செய்திகள்
தொழிலாளி உள்பட 2 பேர் தற்கொலை
கிருஷ்ணகிரி
மாநில செய்திகள்

தொழிலாளி உள்பட 2 பேர் தற்கொலை

தினத்தந்தி
|
28 Feb 2023 12:15 AM IST

சிங்காரப்பேட்டை, சூளகிரி பகுதிகளில் தொழிலாளி உள்பட 2 பேர் தற்கொலை செய்து கொண்டனர்.

ஊத்தங்கரை

சிங்காரப்பேட்டை, சூளகிரி பகுதிகளில் தொழிலாளி உள்பட 2 பேர் தற்கொலை செய்து கொண்டனர்.

தொழிலாளி

சிங்காரப்பேட்டை அருகே உள்ள எக்கூரை சேர்ந்தவர் மணிகண்டன் (வயது 27). கூலித் தொழிலாளி. இவருக்கு மது குடிக்கும் பழக்கம் இருந்தது. மேலும் வேலைக்கு செல்லாமல் இருந்து வந்தார். இதை பெற்றோர் கண்டித்துள்ளனர். இதனால் மனமுடைந்த மணிகண்டன் வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கெண்டார். இது குறித்து சிங்காரப்பேட்டை போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன் பேரில் போலீசார் விரைந்து சென்று உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஊத்தங்கரை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

விஷம் குடித்து தற்கொலை

சூளகிரி அருகே உள்ள அனுசோனை கிராமத்தைச் சேர்ந்தவர் திம்மராயப்பா (65). கூலித்தொழிலாளி. குடும்ப பிரச்சினை காரணமாக இவர் கடந்த 20 ஆண்டுகளாக தனியாக வசித்து வந்தார். இதனால் மனமுடைந்து காணப்பட்ட திம்மராயப்பா போத்தனக்கல் வனப்பகுதியில் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து தகவல் அறிந்ததும் பேரிகை போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக பேரிகை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மேலும் செய்திகள்