ஈரோடு
திருமணமான 3 மாதத்தில் தண்டவாளத்தில் தலை வைத்து ரெயில்வே ஊழியர் தற்கொலை- குடும்ப தகராறில் விபரீத முடிவு
|திருமணமான 3 மாதத்தில் குடும்ப தகராறில் தண்டவாளத்தில் தலை வைத்து ரெயில்வே ஊழியர் தற்கொலை செய்து கொண்டார்.
திருமணமான 3 மாதத்தில் குடும்ப தகராறில் தண்டவாளத்தில் தலை வைத்து ரெயில்வே ஊழியர் தற்கொலை செய்து கொண்டார்.
புதுமாப்பிள்ளை
உத்தரபிரதேச மாநிலம் ஆக்ராவை சேரந்தவர் வாஸ்கோ (வயது 34). இவர் ஈரோடு ரெயில்வே காலனியில் தங்கியிருந்து பயணிகள் ரெயிலின் கார்டாக பணியாற்றி வந்தார். இவருக்கு கடந்த நவம்பர் மாதம் ஹேமாபகேல் என்ற பெண்ணுடன் திருமணம் நடைபெற்றது. இதையடுத்து மனைவியுடன் ஈரோட்டில் வசித்து வந்தார்.
இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு ஈரோடு ரெயில் நிலையத்தின் 2-வது நடைமேடையில் வாஸ்கோ நின்று கொண்டு இருந்தார். அப்போது அந்த நடைமேடைக்கு எக்ஸ்பிரஸ் ரெயில் ஒன்று வந்து கொண்டு இருந்தது. திடீரென வாஸ்கோ தண்டவாளத்தில் தலைவைத்து படுத்துக்கொண்டார்.
இதனால் அவர் கண் இமைக்கும் நேரத்தில் தலை துண்டாகி, உடல் சிதறி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
குடும்ப பிரச்சினை
இது குறித்தும் தகவல் கிடைத்ததும் ஈரோடு ரெயில்வே போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினார்கள். இதையடுத்து தற்கொலை செய்த வாஸ்கோவின் உடலை போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பெருந்துறையில் உள்ள அரசு மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
இதுகுறித்து ஈரோடு ரெயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள். முதல்கட்ட விசாரணையில், குடும்ப பிரச்சினை காரணமாக வாஸ்கோ தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. மேலும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.