< Back
மாநில செய்திகள்
வடமாநில தொழிலாளி உள்பட 2 பேர் தற்கொலை
கிருஷ்ணகிரி
மாநில செய்திகள்

வடமாநில தொழிலாளி உள்பட 2 பேர் தற்கொலை

தினத்தந்தி
|
27 Feb 2023 12:15 AM IST

மத்திகிரி, ஓசூர் பகுதிகளில் வடமாநில தொழிலாளி உள்பட 2 பேர் தற்கொலை செய்து கொண்டனர்.

மத்திகிரி

மத்திகிரி, ஓசூர் பகுதிகளில் வடமாநில தொழிலாளி உள்பட 2 பேர் தற்கொலை செய்து கொண்டனர்.

தொழிலாளி

பீகார் மாநிலம் ஜம்மாய் மாவட்டம் சிக்கந்தரா தாலுகாவை சேர்ந்தவர் கிருஷ்ணா தாஸ். இவரது மகன் மோனுகுமார் (வயது 19). இவர் ஓசூர் கொத்தப்பள்ளியில் தங்கி தனியார் நிறுவன கேண்டீனில் தொழிலாளியாக வேலை செய்து வந்தார். இவருக்கு ஓசூரில் தங்கி வேலை செய்ய பிடிக்கவில்லை. இதனால் சொந்த ஊருக்கே சென்று விடுகிறேன் என்று தனது அண்ணன் துளசிகுமார் தாசிடம் கூறினார்.

அப்போது அவர் அதற்கு மறுப்பு தெரிவித்து, இங்கேயே வேலை பார்க்குமாறு கூறினார். இதனால் மனமுடைந்த மோனுகுமார் தான் தங்கி இருந்த வீட்டில் நேற்று முன்தினம் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து மத்திகிரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

பேரிகை

பேரிகை அருகே உளள மிடுகேப்பள்ளியை சேர்ந்தவர் ராஜப்பா (48). கூலித் தொழிலாளி. உடல் நலக்குறைவால் அவதிப்பட்ட அவர் பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வந்துள்ளார். இருப்பினும் குணமாகவில்லை. இதனால் மனமுடைந்து காணப்பட்ட அவர் வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து பேரிகை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மேலும் செய்திகள்