கிருஷ்ணகிரி
ரெயில் முன் பாய்ந்து தாய்-மகள் தற்கொலை
|ஓசூரில் ரெயில் முன் பாய்ந்து தாய்-மகள் தற்கொலை செய்து கொண்டனர். இதுதொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஓசூர்
ஓசூரில் ரெயில் முன் பாய்ந்து தாய்-மகள் தற்கொலை செய்து கொண்டனர். இதுதொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தண்டவாளத்தில் பிணம்
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் சிவகுமார் நகர் பகுதியில் ரெயில் தண்டவாளத்தில் நேற்று முன்தினம் 2 பெண்கள் உடல் சிதறி பிணமாக கிடப்பதாக ரெயில்வே போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று உடல்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஓசூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது அவர்கள் ஓசூர் எஸ்.பி.எம். காலனியை சேர்ந்த வெங்கடேசப்பா மனைவி சுசீலாம்மா (வயது38), இவரது தாயார் சின்னம்மா(65) என்பது தெரியவந்தது. மூதாட்டி சின்னம்மா மகள் வீட்டில் வசித்து வந்ததும், இவர்கள் வாடகை வீட்டில் வசித்து வந்ததும் தெரியவந்தது.
தாய்-மகள் தற்கொலை
இந்தநிலையில் வீட்டில் இருந்து வெளியில் சென்ற வெங்கடேசப்பா கடந்த 5 நாட்களாகியும் வீடு திரும்பவில்லை. இதனால் சுசீலாம்மா அக்கம் பக்கத்தினரிடம் கேட்டுள்ளார். அப்போது வெங்கடேசப்பா திருப்பதிக்கு செல்வதாக கூறி விட்டு சென்றதாக அவர்கள் தெரிவித்துள்ளனர். கோவிலுக்கு சென்றதை தங்களிடம் கூறவில்லையே என தாயும், மகளும் மன வருத்தத்தில் இருந்துள்ளனர்.
மேலும் கோவிலுக்கு சென்ற வெங்கடேசப்பா 5 நாட்கள் ஆகியும் வீடு திரும்பாததால் சுசீலாம்மா மற்றும் சின்னம்மா ஆகிய இருவரும் அழுது கொண்டே இருந்துள்ளனர். பின்னர் தாய்-மகள் 2 பேரும் ரெயில் முன்பு பாய்ந்து தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது.
இதுகுறித்து ரெயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். ரெயில் முன் பாய்ந்து தாய்-மகள் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.