கிருஷ்ணகிரி
வாலிபர் உள்பட 2 பேர் தற்கொலை
|பாகலூர், சூளகிரி பகுதிகளில் வாலிபர் உள்பட 2 பேர் தற்கொலை செய்து கொண்டனர்.
ஓசூர்
பாகலூர், சூளகிரி பகுதிகளில் வாலிபர் உள்பட 2 பேர் தற்கொலை செய்து கொண்டனர்.
தனியார் நிறுவன ஊழியர்
பாகலூர் காஜல்பேட்டையை சேர்ந்தவர் சந்திராரெட்டி (வயது 25). தனியார் நிறுவன ஊழியர். இவர் வேலை முடிந்து வீட்டிற்கு நேரத்திற்கு வராமல் இருந்ததாக கூறப்படுகிறது. இதை பெற்றோர் கண்டித்துள்ளனர். இதனால் மனமுடைந்த சந்திராரெட்டி விஷம் குடித்து விட்டு வீட்டில் மயங்கி கிடந்தார். இதை கண்டு அதிர்ச்சி அடைந்த உறவினர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக பெங்களூரு தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இதனிடையே சிகிச்சை பலனின்றி சந்திராரெட்டி பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து பாகலூர் வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
தொழிலாளி தற்கொலை
கிருஷ்ணகிரி தாலுகா பந்தாரப்பள்ளியை சேர்ந்தவர் சுரேஷ் (37). இவர் சூளகிரி அருகே திருமலைகவுனி கொட்டாய் பகுதியில் தங்கி பழைய இரும்பு குடோன் ஒன்றில் கூலித்தொழிலாளியாக வேலை செய்து வந்தார். இவருக்கு மது குடிக்கும் பழக்கம் இருந்தது. இதனால் அவரது முதலாளி, பணி நேரத்தில் மது குடித்து விட்டு வரக்கூடாது என்று கூறியதாக தெரிகிறது.
இதனால் மனமுடைந்த சுரேஷ் வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து சூளகிரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.