< Back
மாநில செய்திகள்
கிருஷ்ணகிரி
மாநில செய்திகள்
தனியார் நிறுவன ஊழியர் தற்கொலை
|21 Jan 2023 12:15 AM IST
குருபரப்பள்ளி அருகே தனியார் நிறுவன ஊழியர் தற்கொலை செய்து கொண்டார்.
குருபரப்பள்ளி
தேன்கனிக்கோட்டை தாலுகா ஜக்கேரியை சேர்ந்தவர் ஹரிகிருஷ்ணன் (வயது 28). இவர் குருபரப்பள்ளி அருகே கக்கன்புரத்தில் தங்கி தனியார் நிறுவனத்தில் ஊழியராக பணிபுரிந்து வந்தார். பொங்கல் பண்டிகைக்காக ஹரிகிருஷ்ணன் தனது சொந்த ஊரான ஜக்கேரிக்கு சென்று விட்டு கடந்த 18-ந் தேதி கக்கன்புரத்திற்கு வந்தார்.
இந்த நிலையில் தனது அறையில் அன்று தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். கடன் பிரச்சினை காரணமாக அவர் தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. இது குறித்து குருபரப்பள்ளி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.