< Back
மாநில செய்திகள்
விஷம் குடித்து வாலிபர் தற்கொலை
கிருஷ்ணகிரி
மாநில செய்திகள்

விஷம் குடித்து வாலிபர் தற்கொலை

தினத்தந்தி
|
18 Jan 2023 12:15 AM IST

ஓசூர் அருகே மது குடித்து விட்டு வந்ததை பெற்றோர் கண்டித்ததால் விஷம் குடித்து வாலிபர் தற்கொலை செய்து கொண்டார்.

ஓசூர்

ஓசூர் அருகே பாகலூர் பகுதியை சேர்ந்தவர் ஆனந்த் (வயது26). கூலித் தொழிலாளி. இவருக்கு மது குடிக்கும் பழக்கம் இருந்தது. சம்பவத்தன்று இவர் மது குடித்து விட்டு வீட்டிற்கு வந்துள்ளார். இதை அவரது பெற்றோர் கண்டித்தனர். இதனால் மனமுடைந்த ஆனந்த் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து பாகலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்