< Back
மாநில செய்திகள்
கிருஷ்ணகிரி
மாநில செய்திகள்
விஷம் குடித்து பெண் தற்கொலை
|17 Jan 2023 12:15 AM IST
ஊத்தங்கரை விஷம் குடித்து பெண் தற்கொலை செய்து கொண்டார்.
ஊத்தங்கரை
ஊத்தங்கரை தாலுகா செங்கன்கொட்டாவூரை சேர்ந்தவர் சுப்பிரமணி. இவரது மனைவி சின்னபாப்பா (வயது 60). உடல் நலக்குறைவால் அவதிப்பட்ட அவர் இதற்காக பல மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றும் குணமாகவில்லை. இதனால் மனமுடைந்த அவர் விஷம் குடித்து விட்டு மயங்கி கிடந்தார். அவரை உறவினர்கள் மீட்டு சிகிச்சைக்காக கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார்.இது குறித்து ஊத்தங்கரை போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.