கிருஷ்ணகிரி
பிளஸ்-2 மாணவி தற்கொலை
|ஓசூரில் பிளஸ்-2 மாணவி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
ஓசூர்
ஓசூரில் பிளஸ்-2 மாணவி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
பிளஸ்-2 மாணவி
ஓசூர் ஜூஜூவாடி திருவள்ளுவர் நகர் 4-வது கிராசை சேர்ந்தவர் ஆனந்த். இவர் தனியார் நிறுவனத்தில் காவலாளியாக பணிபுரிந்து வருகிறார்.இவரது மகள் கிருத்திகா (வயது 16). இவர் ஜூஜூவாடி அரசு மேல்நிலைப்பள்ளியில் பிளஸ்-2 படித்து வந்தார். குடும்ப பிரச்சினை காரணமாக மாணவி நேற்று முன்தினம் வீட்டில் தூக்குப்போட்டு கொண்டார்.
இதை கண்டு அதிர்ச்சி அடைந்த குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் மாணவியை மீட்டு ஓசூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் செல்லும் வழியிலேயே அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.இது குறித்து ஓசூர் சிப்காட் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
போலீசார் விசாரணை
அதன் பேரில் போலீசார் விரைந்து சென்று மாணவியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஓசூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். பிளஸ்-2 மாணவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.