ஈரோடு
வாய்க்காலில் குதித்து டிரைவர் தற்கொலை: தற்கொலைக்கு தூண்டியதாக உறவினர் கைது
|நம்பியூர் அருகே வாய்க்காலில் குதித்து டிரைவர் ஒருவர் தற்கொலை செய்துகொண்டார். அவரை தற்கொலைக்கு தூண்டியதாக உறவினர் ஒருவரை போலீசார் கைது செய்துள்ளார்கள்.
நம்பியூர்
நம்பியூர் அருகே வாய்க்காலில் குதித்து டிரைவர் ஒருவர் தற்கொலை செய்துகொண்டார். அவரை தற்கொலைக்கு தூண்டியதாக உறவினர் ஒருவரை போலீசார் கைது செய்துள்ளார்கள்.
பிணமாக மிதந்தார்
ஈரோடு மாவட்டம் கோபி மொடச்சூரை சேர்ந்தவர் தமிழ்ச்செல்வன் (வயது 37). இவருக்கு திருமணம் ஆகி மனைவியும், 2 மகள்கள் உள்ளனர். வேன் டிரைவராக வேலை பார்த்து வந்தார். இந்தநிலையில் கடந்த 22-ந் தேதி வீட்டைவிட்டு வெளியே சென்ற தமிழ்செவ்வன் அதன்பின்னர் வீடு திரும்பவில்லை.
இந்தநிலையில் மறுநாள் காலை நம்பியூர் அருகே உள்ள அலங்கியம் பகுதியில் செல்லும் பவானிசாகர் வாய்க்காலில் தமிழ்செல்வன் பிணமாக மிதந்தார். கரையில் அவர் சென்ற மோட்டார்சைக்கிளும், அணிந்திருந்த உடைகளும் இருந்தன. இதுபற்றி தகவல் அறிந்ததும் அங்கு சென்ற நம்பியூர் போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சத்தி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவைத்தார்கள்.
உறவினர் கைது
பின்னர் போலீசார் வாய்க்கால் கரையில் இருந்த தமிழ்செல்வனின் சட்டையில் வைத்திருந்த செல்போனை எடுத்து ஆய்வு செய்தார்கள். அப்போது தமிழ்செல்வன் தற்கொலை செய்துகொள்வதற்கு முன்பு கோபி சின்ன மொடச்சூர் பகுதியைச் சேர்ந்த பரமேஸ்வரன் (42) என்பவரிடம் 7 முறை பேசியிருந்தது தெரிந்தது.
இதையடுத்து பரமேஸ்வரனை பிடித்து போலீசார் துருவி துருவி விசாரணை நடத்தினார்கள். அப்போது பரமேஸ்வரன் போலீசாாிடம், நான் திருப்பூரில் உள்ள ஒரு லாரி கம்பெனியில் வேலை பார்த்து வருகிறேன். எனக்கு மனைவியும், 2 மகள்களும் உள்ளனர். தமிழ்செல்வனுக்கு என் மனைவி மாமன் மகள் ஆவார். இதை பயன்படுத்தி தமிழ்செல்வன் என் மனைவியை தகாத உறவுக்கு அழைத்தார். இதுபற்றி என்னிடம் என் மனைவி கூறினார். அதனால் தமிழ்செல்வனை ெசல்போனில் அழைத்து கண்டித்தேன் என்று கூறினார்.
இதையடுத்து தமிழ்செல்வனை தற்கொலைக்கு தூண்டியதாக பரமேஸ்வரனை போலீசார் கைது செய்தார்கள்.