தர்மபுரி
தனியார் நிறுவன ஊழியர் தூக்குப்போட்டு தற்கொலை
|தர்மபுரி கோட்டை தெரு பகுதியை சேர்ந்தவர் அருண்குமார் (வயது 33). பெங்களூருவில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் ஊழியராக வேலை செய்து வந்தார். இவர் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு பெங்களூருவை சேர்ந்த பவித்ரா (32) என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஒரு ஆண் குழந்தை உள்ளது.
இந்த நிலையில் கணவன்- மனைவி இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் தர்மபுரியில் உள்ள ஒரு தனியார் கல்லூரியின் அருகே மரக்கிளையில் தூக்கில் தொங்கிய நிலையில் அருண்குமார் இறந்து கிடந்தார். இதுபற்றி தகவல் அறிந்த தர்மபுரி டவுன் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று அவருடைய உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். அவர் தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என்று முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. இதுதொடர்பாக போலீஸ் இன்ஸ்பெக்டர் நவாஸ் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.