கிருஷ்ணகிரி
குழந்தை இல்லாத ஏக்கத்தில் பெண் தற்கொலை
|வேப்பனப்பள்ளி அருகே குழந்தை இல்லாத ஏக்கத்தில் எலி மருந்தை தின்று பெண் தற்கொலை செய்து கொண்டார். இதுதொடர்பாக உதவி கலெக்டர் விசாரணை நடத்தி வருகிறார்.
வேப்பனப்பள்ளி
வேப்பனப்பள்ளி அருகே குழந்தை இல்லாத ஏக்கத்தில் எலி மருந்தை தின்று பெண் தற்கொலை செய்து கொண்டார். இதுதொடர்பாக உதவி கலெக்டர் விசாரணை நடத்தி வருகிறார்.
பெண் தற்கொலை
கிருஷ்ணகிரி மாவட்டம் வேப்பனப்பள்ளி அருகே உள்ள சின்னகொத்தூர் கிராமத்தைச் சேர்ந்தவர் விக்னேஷ்குமார். இவரது மனைவி இந்துமதி (வயது20). இவர்களுக்கு கடந்த ஒரு ஆண்டுக்கு முன்பு திருமணம் நடந்தது. இந்த தம்பதிக்கு குழந்தை இல்லை. இதனால் இந்துமதி மனமுடைந்து காணப்பட்டார்.
சம்பவத்தன்று குழந்தை இல்லாத ஏக்கத்தில் இந்துமதி எலி மருந்தை தின்று விட்டு வீட்டில் மயங்கி கிடந்தார். இதை கண்டு அதிர்ச்சி அடைந்த உறவினர்கள் அவரை மீட்டு கிருஷ்ணகிரி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி இந்துமதி பரிதாபமாக உயிரிழந்தார்.
உதவி கலெக்டர் விசாரணை
இதுகுறித்து வேப்பனப்பள்ளி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறனர். மேலும் திருமணமான ஓராண்டில் பெண் தற்கொலை செய்து கொண்டதால் கிருஷ்ணகிரி உதவி கலெக்டர் விசாரணை நடத்தி வருகிறார். இந்த சம்பவம் இப்பகுதியில் பரபரப்பையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.