கிருஷ்ணகிரி
10-ம் வகுப்பு மாணவி தற்கொலை
|காவேரிப்பட்டணம் அருகே விஷம் குடித்து 10-ம் வகுப்பு மாணவி தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
காவேரிப்பட்டணம்
காவேரிப்பட்டணம் அருகே விஷம் குடித்து 10-ம் வகுப்பு மாணவி தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
பள்ளி மாணவி
கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டணம் அருகே உள்ள அய்யப்பன்கொட்டாய் பகுதியை சேர்ந்தவர் முருகன். இவரது மகள் பூவரசி (வயது 15). இந்த சிறுமி பையூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வந்தார். மாணவிக்கு அடிக்கடி உடல் நலம் பாதிக்கப்பட்டு வந்தது.
இதற்காக அவர் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வந்தார். இருப்பினும் உடல்நலம் குணமாகவில்லை. இதனால் மனமுடைந்த மாணவி விஷம் குடித்து விட்டு வீட்டில் மயங்கி கிடந்தார். இதை கண்டு பெற்றோர் அதிர்ச்சி அடைந்தனர்.
பரிதாப சாவு
பின்னர் குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் சிறுமியை மீட்டு காவேரிப்பட்டணம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக சிறுமி கிருஷ்ணகிரி அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். அங்்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி மாணவி நேற்று முன்தினம் பரிதாபமாக இறந்தார்.
இது குறித்து காவேரிப்பட்டணம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன் பேரில் போலீசார் விரைந்து சென்று மாணவியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மாணவி தற்கொலை செய்து கொண்டது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.