ஈரோடு
கோபி அருகே விஷம் குடித்து ேவன் டிரைவர் தற்கொலை
|கோபி அருகே விஷம் குடித்து வேன் டிரைவர் தற்கொலை செய்துகொண்டார்.
கடத்தூர்
கோபி அருகே விஷம் குடித்து வேன் டிரைவர் தற்கொலை செய்துகொண்டார்.
வேன் டிரைவர்
கோபி அருகே உள்ள குள்ளம்பாளையத்தை சேர்ந்தவர் ராஜேந்திரன் (வயது 60). இவர் அந்த பகுதியில் உள்ள ஒரு தனியார் கம்பெனியில் வேன் டிரைவராக வேலை பார்த்து வந்தார்.
இதற்கிடையே கடந்த சில மாதங்களாக ராஜேந்திரன் வேலையில்லாமல் வீட்டில் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இதனால் அவர் மனம் உடைந்து காணப்பட்டார்.
விஷம் குடித்தார்
இந்தநிலையில் நேற்று முன்தினம் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தற்கொலை செய்து கொள்ள முடிவெடுத்து ராஜேந்திரன் விஷம் குடித்துவிட்டார். இதைப்பார்த்த அக்கம்பக்கத்தினர் உடனே அவரை மீட்டு சிகிச்சைக்காக கோபியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு ஆம்புலன்சில் கொண்டு சென்றார்கள். அங்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்தும் பலனின்றி ராஜேந்திரன் இறந்தார். இது குறித்து கோபி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.