கிருஷ்ணகிரி
வாலிபர் விஷம் குடித்து தற்கொலை
|ஓசூரில் மோட்டார் சைக்கிள் வாங்கி தர பெற்றோர் மறுத்ததால் மனமுடைந்த வாலிபர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
ஓசூர்
ஓசூரில் மோட்டார் சைக்கிள் வாங்கி தர பெற்றோர் மறுத்ததால் மனமுடைந்த வாலிபர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
தனியார் நிறுவன ஊழியர்
தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் தாலுகா போடூர் பகுதியை சேர்ந்தவர் செந்தில்குமார். இவரது மகன் நவீன் (வயது19). இவர்கள் ஓசூர் பேடரப்பள்ளி பகுதியில் குடும்பத்துடன் வசித்து வந்தனர். நவீன் ஓசூர் சிப்காட்டில் உள்ள தனியார் நிறுவனத்தில் ஊழியராக வேலை செய்து வந்தார்.
இந்த நிலையில் நவீன், தனது பெற்றோரிடம் புதிய மோட்டார் சைக்கிள் வாங்கி தருமாறு கேட்டுள்ளார். அதற்கு அவர்கள் மறுத்து விட்டதாக கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த நவீன் சம்பவத்தன்று விஷம் குடித்து விட்டு வாயில் நுரை தள்ளிய நிலையில் வீட்டில் மயங்கி கிடந்தார்.
போலீசார் விசாரணை
இதை கண்டு அதிர்ச்சி அடைந்த குடும்பத்தினர் அவரை மீட்டு சேலம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி நவீன் பரிதாபமாக இறந்தார். இது குறித்து ஓசூர் சிப்காட் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.