< Back
மாநில செய்திகள்
கோபி அருகே தூக்குப்போட்டு பெண் தற்கொலை- குடும்ப தகராறில் விபரீத முடிவு
ஈரோடு
மாநில செய்திகள்

கோபி அருகே தூக்குப்போட்டு பெண் தற்கொலை- குடும்ப தகராறில் விபரீத முடிவு

தினத்தந்தி
|
12 Nov 2022 2:41 AM IST

கோபி அருகே குடும்ப தகராறில் தூக்குப்போட்டு பெண் தற்கொலை செய்து கொண்டார்.

கடத்தூர்

கோபி அருகே குடும்ப தகராறில் தூக்குப்போட்டு பெண் தற்கொலை செய்து கொண்டார்.

குடும்ப தகராறு

கோபி அருகே உள்ள பொன்னாச்சிப்புதூரை சேர்ந்தவர் பாலமுருகன். இவருடைய மனைவி கலைச்செல்வி (வயது 33). விவசாயி. பாலமுருகனும், கலைச்செல்வியும் கடந்த 8 ஆண்டுகளுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு நந்திதா (6) என்ற மகள் உள்ளார்.

இந்த நிலையில் பாலமுருகன் அடிக்கடி மது குடித்துவிட்டு வீட்டுக்கு வருவதாக கூறப்படுகிறது. இதனால் அவருக்கும், கலைச்செல்விக்கும் இடையே தகராறு ஏற்பட்டு வந்தது. நேற்று முன்தினம் பாலமுருகனுக்கும், கலைச்செல்விக்கும் இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டுள்ளது.

பெண் தற்கொலை

இதனால் மனமுடைந்து காணப்பட்ட கலைச்செல்வி நேற்று காலை வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் விட்டத்தில் கயிற்றால் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இதை பார்த்த அக்கம்பக்கத்தினர் இதுகுறித்து கோபி போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். அதைத்தொடர்ந்து போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று கலைச்செல்வியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கோபி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

மேலும் செய்திகள்