< Back
மாநில செய்திகள்
தர்மபுரி
மாநில செய்திகள்
விவசாயி விஷம் குடித்து தற்கொலை
|12 Nov 2022 12:15 AM IST
நல்லம்பள்ளி அருகே விவசாயி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
நல்லம்பள்ளி:
நல்லம்பள்ளி அருகே எ.ஜெட்டிஅள்ளி கிராமத்தை சேர்ந்தவர் சுப்பிரமணி (வயது73). விவசாயி. இவர் கடந்த 9-ந் தேதி வீட்டில் விஷம் குடித்து விட்டு மயங்கி கிடந்துள்ளார். இதனை அறிந்த குடும்பத்தினர் மற்றும் அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக தர்மபுரி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இதனிடையே தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி நேற்று காலை சுப்பிரமணி பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து அதியமான்கோட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.