< Back
மாநில செய்திகள்
ஓசூரில் வாலிபர் தற்கொலை
கிருஷ்ணகிரி
மாநில செய்திகள்

ஓசூரில் வாலிபர் தற்கொலை

தினத்தந்தி
|
31 Oct 2022 12:15 AM IST

ஓசூரில் வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

ஓசூர்:

ஓசூர் பாகலூர் சாலை மூவேந்தர் நகரை சேர்ந்தவர் காந்தராஜ் (வயது 29). இவருக்கு ஒரு பெண்ணுடன் பழக்கம் இருந்தது. இந்த நிலையில் அந்த பெண்ணுக்கு வேறு ஒருவருடன் பழக்கம் ஏற்பட்டது. இதை காந்தராஜ் கேட்ட போது அந்த பெண்ணுக்கும், அவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இதில் மனமுடைந்த காந்தராஜ், வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து தகவல் அறிந்ததும் ஓசூர் அட்கோ போலீசார் விரைந்து சென்று பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மேலும் செய்திகள்