< Back
மாநில செய்திகள்
கொல்லிமலையில்  விவசாயி தூக்குப்போட்டு தற்கொலை
நாமக்கல்
மாநில செய்திகள்

கொல்லிமலையில் விவசாயி தூக்குப்போட்டு தற்கொலை

தினத்தந்தி
|
29 Oct 2022 12:15 AM IST

கொல்லிமலையில் விவசாயி தூக்குப்போட்டு தற்கொலை

சேந்தமங்கலம்:

கொல்லிமலையில் விவசாயி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

விவசாயி

கொல்லிமலை ஊராட்சி ஒன்றியம் சேலூர் நாடு ஊராட்சி குழிப்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் ராஜேந்திரன் (வயது 53). விவசாயி. இவருடைய மனைவி கலைச்செல்வி (40). இந்த நிலையில் கணவன், மனைவி இடையே அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது.

இதனால் மனமுடைந்து காணப்பட்ட ராஜேந்திரன் வீட்டில் யாரும் இல்லாதபோது கயிற்றால் வீட்டு முற்றத்தில் தூக்குப்போட்டு கொண்டார். இதனை அறிந்து அதிர்ச்சி அடைந்த அக்கம் பக்கத்தினர் மற்றும் உறவினர்கள் அவரை மீட்டு நாமக்கல் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.

விசாரணை

அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி ராஜேந்திரன் இறந்தார். இதுகுறித்து கொல்லிமலை வாழவந்தி நாடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். குடும்ப தகராறில் விவசாயி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் செய்திகள்