< Back
மாநில செய்திகள்
ஈரோடு
மாநில செய்திகள்
பெருந்துறை அருகே தூக்குப்போட்டு பூ வியாபாரி தற்கொலை
|26 Oct 2022 1:50 AM IST
பெருந்துறை அருகே தூக்குப்போட்டு பூ வியாபாரி தற்கொலை
பெருந்துறை
பெருந்துறை அருகே உள்ள பெரிய மடத்துப்பாளையத்தை சேர்ந்தவர் கோபால் (வயது 61). இவர் பெருந்துறை பஸ் நிலையம் அருகே பூக்கடை நடத்தி வந்தார். நேற்று இவர் வீட்டில் உள்ள உத்திரத்தில் சேலையால் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுபற்றி அறிந்ததும் பெருந்துறை போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று கோபால் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பெருந்துறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து கோபால் தற்கொலை செய்து கொண்டது எதற்காக? என விசாரணை நடத்தி வருகிறார்கள்.
தற்கொலை செய்து கொண்ட கோபாலுக்கு கல்யாணி (50) என்ற மனைவியும் 2 மகன்களும் உள்ளனர்.