< Back
மாநில செய்திகள்
கிருஷ்ணகிரி
மாநில செய்திகள்
வாலிபர் தற்கொலை
|26 Oct 2022 12:15 AM IST
சூளகிரி அருகே வாலிபர் தற்கொலை செய்து கொண்டார்.
சூளகிரி:
கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி அருகே குருபசப்படி கிராமத்தை சேர்ந்தவர் முனி கிருஷ்ணன். இவரது மகன் வினித்குமார் (வயது22). கூலித்தொழிலாளி. இவருக்கு மது குடிக்கும் பழக்கம் இருந்தது. இதனால் அவர் தீராத வயிற்று வலியால் அவதிப்பட்டார். இதற்காக பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றும் வலி குணமடையவில்லை. இதனால் மனமுடைந்து காணப்பட்ட வினித்குமார் வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து சூளகிரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.