கிருஷ்ணகிரி
பெண்கள் உள்பட3 பேர் தற்கொலை
|கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பெண்கள் உள்பட 3 பேர் தற்கொலை செய்து கொண்டனர்.
மத்தூர்:
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பெண்கள் உள்பட 3 பேர் தற்கொலை செய்து கொண்டனர்.
விஷம் குடித்த பெண்
கிருஷ்ணகிரி மாவட்டம் மத்தூர் அருகே உள்ள அத்திகானூரை சேர்ந்தவர் துரை. இவரது மனைவி ராதா (வயது 32). உடல் நலக்குறைவால் அவதிப்பட்ட அவர் பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றும் குணமடையவில்லை. இதனால் மனமுடைந்து காணப்பட்ட அவர் கடந்த 10-ந் தேதி விஷம் குடித்து விட்டு மயங்கி கிடந்தார்.
இதையடுத்து அவரை உறவினர்கள் மீட்டு சிகிச்சைக்காக தர்மபுரி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து மத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
காவேரிப்பட்டணம்
காவேரிப்பட்டணம் அருகே உள்ள பிள்ளையார் கோவிலூரை சேர்ந்தவர் அனு (24). தனியார் ஜவுளி ஏற்றுமதி நிறுவன ஊழியர். உடல் நலக்குறைவால் அவதிப்பட்ட அவர் பல இடங்களில் சிகிச்சை பெற்றும் குணமடையவில்லை. இதனால் மனமுடைந்த அவர் நேற்று முன்தினம் வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இதுகுறித்து காவேரிப்பட்டணம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன் பேரில் போலீசார் விரைந்து சென்று அனுவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுதொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
தொழிலாளி தற்கொலை
மகராஜகடை அருகே உள்ள பாம்புகாரன் கொட்டாயை சேர்ந்தவர் முருகேசன் (29). கூலித்தொழிலாளி. உடல் நலக்குறைவால் அவதிப்பட்ட அவர், இதற்காக பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றும் குணமடையவில்லை. இதனால் மனமுடைந்த முருகேசன் விஷம் குடித்து விட்டு மயங்கி கிடந்தார்.
இதையடுத்து அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக கிருஷ்ணகிரி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக இறந்தார். இது குறித்து மகராஜகடை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.