< Back
மாநில செய்திகள்
கிருஷ்ணகிரி
மாநில செய்திகள்
வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை
|8 Oct 2022 12:15 AM IST
ஓசூரில் விபத்தில் காயம் அடைந்த வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
ஓசூர்:
கர்நாடக மாநிலம் பெல்லாரி திருகப்பா தாலுகா தேவலபுராவை சேர்ந்தவர் ராஜப்பா (வயது 24). இவர் ஓசூரில் சிப்காட் பாரதி நகர் 5-வது கிராஸ் பகுதியில் தங்கி கூலி வேலை செய்து வந்தார். இவர் கடந்த 3 நாட்களுக்கு முன்பு மோட்டார்சைக்கிளில் சென்ற போது விபத்தில் சிக்கினார். இதில் காயமடைந்த ராஜப்பா, மனவருத்தத்தில் இருந்தார். இந்தநிலையில் நேற்று முன்தினம் அவர் வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து ஓசூர் சிப்காட் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.