கிருஷ்ணகிரி
பாலிடெக்னிக் கல்லூரி மாணவி தற்கொலை
|சாமல்பட்டி அருகே பாலிடெக்னிக் கல்லூரி மாணவி தற்கொலை செய்து கொண்டார்.
ஊத்தங்கரை:
சாமல்பட்டி அருகே பாலிடெக்னிக் கல்லூரி மாணவி தற்கொலை செய்து கொண்டார்.
பாலிடெக்னிக் மாணவி
ஊத்தங்கரை தாலுகா சாமல்பட்டி அருகே உள்ள அதிவீரம்பட்டியை சேர்ந்தவர் சின்னதம்பி. இவரது மகள் சுவேதா (வயது 19). இவர் ஊத்தங்கரை அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் கணினி அறிவியல் பாட பிரிவில் 3-ம் ஆண்டு படித்து வந்தார்.
கடந்த 1-ந் தேதி மாணவிக்கும், அவரது தாயாருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இதனால் மனமுடைந்த மாணவி, விஷம் குடித்து விட்டு மயங்கி கிடந்தார். அவரை உறவினர்கள் மீட்டு சிகிச்சைக்காக ஊத்தங்கரை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.
போலீசார் விசாரணை
பின்னர் மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரியில் அவர் சேர்க்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி மாணவி பரிதாபமாக இறந்தார். இது தொடர்பான புகாரின் ேபரில் சாமல்பட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் பத்மாவதி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். பாலிடெக்னிக் கல்லூரி மாணவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.