< Back
மாநில செய்திகள்
தொழிலாளி தற்கொலை
தர்மபுரி
மாநில செய்திகள்

தொழிலாளி தற்கொலை

தினத்தந்தி
|
14 Sept 2022 10:21 PM IST

மாரண்ட‌அள்ளி அருகே தொழிலாளி தற்கொலை செய்து கொண்டார்.

மாரண்டஅள்ளி:

தர்மபுரி மாவட்டம் மாரண்டஅள்ளி அருகே சீரியம்பட்டியை சேர்ந்தவர் அழகேசன் (வயது43). கூலித்தொழிலாளி. இவர் சற்று மனநலம் பாதிக்கப்பட்டவர். நேற்று முன்தினம் வீட்டில் இருந்து வெளியே சென்றவர் மீண்டும் வீடு திரும்பவில்லை. இந்தநிலையில் நேற்று காலை அதே பகுதியில் உள்ள மரத்தில் அவா் தூக்கில் பிணமாக தொங்கினார். இதுகுறித்து தகவல் அறிந்ததும் மாரண்டஅள்ளி போலீசார் விரைந்து சென்று அழகேசனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பாலக்கோடு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அவர் தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்