நாமக்கல்
கொல்லிமலையில் கல்லூரி மாணவர் தூக்குப்போட்டு தற்கொலை
|கொல்லிமலையில் கல்லூரி மாணவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
சேந்தமங்கலம்:
கொல்லிமலையில் கல்லூரி மாணவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
கல்லூரி மாணவர்
நாமக்கல் மாவட்டம் கொல்லிமலை ஒன்றியம் பெரக்கரை நாடு ஊராட்சி அருவங்காடு கிராமத்தை சேர்ந்தவர் செல்வம். இவருடைய மனைவி புஷ்பா. இவர்களது மகன் வல்லரசு (வயது 20). இவர் பரமத்திவேலூரில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் பி.எஸ்சி. முதலாம் ஆண்டு படித்து வந்தார்.
இந்த நிலையில் சொந்த ஊருக்கு வந்து செல்லும்போது, அதே பகுதியை சேர்ந்த திருமணமான பெண் ஒருவருடன் மாணவர் வல்லரசுக்கு கள்ளக்காதல் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதையறிந்த அந்த பெண்ணின் கணவர் மனைவியை கண்டித்துள்ளார். இதற்கிடையே கள்ளக்காதல் விவகாரம் வெளியே தெரிந்ததால் அவமானம் அடைந்ததாக கருதிய வல்லரசு கடந்த சில தினங்களுக்கு முன்பு வீட்டை பூட்டி கொண்டு தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
விசாரணை
அவரது வீட்டில் இருந்து துர்நாற்றம் வீசியதால் சந்தேகம் அடைந்த அக்கம் பக்கத்தினர் செங்கரை போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். அதன்பேரில் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்ற போலீசார் வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்றனர்.
பின்னர் மாணவர் வல்லரசு உடலை மீட்டு ராசிபுரம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து செங்கரை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.