ஈரோடு
சிவகிரியில் பஸ் கிளீனர் தூக்குப்போட்டு தற்கொலை
|சிவகிரியில் பஸ் கிளீனர் தூக்குப்போட்டு தற்கொலை
சிவகிரி
சிவகிரி நெசவாளர் காலனியில் வசித்து வருபவர் சுப்பிரமணி. அவருடைய மனைவி மணிமேகலை (வயது 39). இவர்களுடைய மகன் கணேஷ் (18). இவர் தனியார் பஸ்சில் கிளீனராக வேலை பார்த்து வந்தார்.
இந்த நிலையில் சரிவர வேலைக்கு செல்லவில்லை என்று வீட்டில் திட்டியதாக கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த அவர் ஏற்கனவே விஷத்தை குடித்து தற்கொலைக்கு முயன்றார். உடனே உறவினர்கள் அவரை மீட்டு ஆஸ்பத்திரியில் சேர்த்து காப்பாற்றினர். இந்த நிலையில் நேற்று முன்தினம் வீட்டில் உள்ள கொக்கியில் வேட்டியால் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுபற்றிய தகவல் கிடைத்ததும் சிவகிரி போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று கணேசின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கொடுமுடி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
இதுகுறித்து போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் அருள்சாமி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.