< Back
மாநில செய்திகள்
சித்தோடு அருகே என்ஜினீயரிங் மாணவர் தூக்குப்போட்டு தற்கொலை
ஈரோடு
மாநில செய்திகள்

சித்தோடு அருகே என்ஜினீயரிங் மாணவர் தூக்குப்போட்டு தற்கொலை

தினத்தந்தி
|
7 Sept 2022 2:45 AM IST

சித்தோடு அருகே என்ஜினீயரிங் மாணவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

பவானி

சித்தோடு அருகே என்ஜினீயரிங் மாணவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

என்ஜினீயரிங் மாணவர்

ஈரோடு மாவட்டம் பவானியை அடுத்த சித்தோடு அருகே உள்ள கொங்கம்பாளையம் ஆவுடையான் காடு பகுதியைச் சேர்ந்தவர் ஈஸ்வரன். இவருடைய மகன் நவீன் (வயது 21). இவர் பெருந்துறையில் உள்ள ஒரு தனியார் என்ஜினீயரிங் கல்லூரியில் பி.ஏ. 2-ம் ஆண்டு படித்து வந்தார்.

இந்த நிலையில் ஓணம் பண்டிகையை முன்னிட்டு ஈஸ்வரன், அவருடைய மனைவி மற்றும் இளைய மகன் ஆகியோர் கேரளாவில் உள்ள உறவினர் வீட்டுக்கு சென்று இருந்தனர். தேர்வு நடைபெற உள்ளதாக கூறி நவீன் கேரளா செல்லாமல் வீட்டில் இருந்துள்ளார்.

தூக்குப்போட்டு தற்கொலை

இந்த நிலையில் நேற்று காலை நவீனின் மாமா ஈஸ்வரனின் வீட்டுக்கு சென்றுள்ளார். அப்போது வீடு உள்பக்கமாக பூட்டப்பட்டு இருந்தது. இதைத்தொடர்ந்து அவர் ஈஸ்வரனுக்கு தகவல் கொடுத்துள்ளார். இதையடுத்து அவர் வீட்டுக்கு வந்து வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே சென்று பார்த்தார். அங்கு நவீன் வேட்டியால் தூக்குப்போட்டு பிணமாக தொங்கி கொண்டிருந்தார்.

இதுபற்றிய தகவல் கிடைத்ததும் சித்தோடு போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று, நவீனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஈரோடு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

நவீன் தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம் தெரியவில்லை. இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்