< Back
மாநில செய்திகள்
விஷம் குடித்து கல்லூரி மாணவி தற்கொலை
கிருஷ்ணகிரி
மாநில செய்திகள்

விஷம் குடித்து கல்லூரி மாணவி தற்கொலை

தினத்தந்தி
|
30 Aug 2022 11:17 PM IST

அஞ்செட்டி அருகே விஷம் குடித்து கல்லூரி மாணவி தற்கொலை செய்து கொண்டார்.

தேன்கனிக்கோட்டை:

அஞ்செட்டி அருகே சேசுராஜபுரம் கிராமத்தை சேர்ந்தவர் முத்து. இவருடைய மகள் ஷீலா (வயது 18) இவர் தர்மபுரி மாவட்டம் மாமரத்துபள்ளம் பகுதியில் உள்ள விடுதியில் தங்கி அங்குள்ள கல்லூரியில் பி.காம் 2-ம் ஆண்டு படித்து வந்தார். தேர்வில் தோல்வியடைந்து விடுவோம் என பயந்து சம்பவத்தன்று மாணவி விஷம் குடித்டு விட்டு மயங்கி கிடந்தார். அவரை பொதுமக்கள் மீட்டு பென்னாகரம் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். பின்னர் மேல்சிகிச்சைக்காக தர்மபுரி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி நேற்று முன்தினம் மாணவி உயிரிழந்தார். இதுகுறித்து அஞ்செட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்