< Back
மாநில செய்திகள்
துப்புரவு பணியாளர் தற்கொலை
கிருஷ்ணகிரி
மாநில செய்திகள்

துப்புரவு பணியாளர் தற்கொலை

தினத்தந்தி
|
27 Aug 2022 9:55 PM IST

தேன்கனிக்கோட்டை அருகே துப்புரவு பணியாளர் தற்கொலை செய்து கொண்டார்.

தேன்கனிக்கோட்டை

தேன்கனிக்கோட்டை தாலுகா தோட்டி குப்பம் கிராமத்தை சேர்ந்தவர் நாகராஜ் (வயது 38). துப்புரவு பணியாளர். இவருக்கு மது குடிக்கும் பழக்கம் இருந்ததால் வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்தார். இதற்காக அவர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றும் குணமாகவில்லை. இதனால் மனமுடைந்த அவர் நேற்று முன்தினம் வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து தேன்கனிக்கோட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்