தர்மபுரி
ஜாமீனில் வந்த தொழிலாளி தற்கொலை
|இண்டூர் அருகே மனைவியை கொலை செய்த வழக்கில் ஜாமீனில் வந்த தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
பாப்பாரப்பட்டி:
இண்டூர் அருகே மனைவியை கொலை செய்த வழக்கில் ஜாமீனில் வந்த தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:-
ஆடு மேய்க்கும் தொழிலாளி
இண்டூர் அருகே உள்ள கழனிக்காட்டூர் கிராமத்தை சேர்ந்தவர் காந்தி (வயது 57). ஆடு மேய்க்கும் தொழிலாளி. இவர் கடந்த 6 மாதங்களுக்கு முன்பு தனது மனைவியை கொலை செய்ததாக கூறப்படுகிறது. இதுதொடர்பாக இண்டூர் போலீசார், காந்தியை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
இந்தநிலையில் கடந்த வாரம் அவர் நிபந்தனை ஜாமீனில் சிறையில் இருந்து வெளியே வந்தார். பின்னர் அவர் இண்டூர் போலீஸ் நிலையத்தில் தினமும் கையெழுத்து போட்டு வந்தார். இதனிடையே கழனிக்காட்டூர் கிராமத்தில் தனது நிலத்தில் உள்ள மரத்தில் காந்தி நேற்று தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
போலீசார் விசாரணை
இதுகுறித்து அக்கம் பக்கத்தினர் இண்டூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன் பேரில் போலீசார் விரைந்து சென்று காந்தியின் பிணத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக தர்மபுரி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து இண்டூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மனைவியை கொலை செய்த வழக்கில் ஜாமீனில் வந்த தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அந்த பகுதியில் சோகத்தையும், பரபரப்பையும் ஏற்படுத்தியது.