< Back
மாநில செய்திகள்
டி.என்.பாளையம் அருகே விஷம் குடித்து பெண் தற்கொலை- விவசாயத்தில் நஷ்டம் ஏற்பட்டதால் விபரீத முடிவு
ஈரோடு
மாநில செய்திகள்

டி.என்.பாளையம் அருகே விஷம் குடித்து பெண் தற்கொலை- விவசாயத்தில் நஷ்டம் ஏற்பட்டதால் விபரீத முடிவு

தினத்தந்தி
|
24 Aug 2022 3:11 AM IST

டி.என்.பாளையம் அருகே விவசாயத்தில் நஷ்டம் ஏற்பட்டதால் விஷம் குடித்து பெண் தற்கொலை செய்து கொண்டார்.

டி.என்.பாளையம்

டி.என்.பாளையம் அருகே விவசாயத்தில் நஷ்டம் ஏற்பட்டதால் விஷம் குடித்து பெண் தற்கொலை செய்து கொண்டார்.

கடன் வாங்கி...

ஈரோடு மாவட்டம் டி.என்.பாளையம் அருகே உள்ள கொங்கர்பாளையத்தை அடுத்த கவுண்டம்பாளையம் பகுதியை சேர்ந்தவர் செந்தில். விவசாயி. இவருடைய மனைவி தனலட்சுமி (வயது 42). விவசாயத்தில் கணவருக்கு உறுதுணையாக இருந்து உள்ளார். செந்தில், தனலட்சுமி ஆகியோர் தங்களுக்கு சொந்தமான ஒரு ஏக்கர் நிலத்தில் விவசாயம் செய்து வந்தனர். மேலும் அவர்கள் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு கடன் வாங்கி விவசாய நிலத்தை குத்தகைக்கு எடுத்தும் விவசாயம் செய்து வந்தனர். நிலத்தை குத்தகைக்கு எடுத்து விவசாயம் செய்து வந்ததில் அவர்களுக்கு பெரும் நஷ்டம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. மேலும் வாங்கிய கடனை திருப்பி செலுத்த முடியாமல் அவர்கள் அவதிப்பட்டு வந்து உள்ளனர்.

சாவு

இதனால் கடந்த சில நாட்களாக தனலட்சுமி மனமுடைந்த நிலையில் காணப்பட்டார். இந்த நிலையில் நேற்று வீட்டில் தனியாக இருந்த தனலட்சுமி திடீரென விஷத்தை குடித்து விட்டார். இதனால் அவர் வாந்தி எடுத்தார். இதை கண்டதும் அங்கிருந்த செந்தில் அக்கம் பக்கத்தினர் உதவியுடன் தனலட்சுமியை மீட்டு சிகிச்சைக்காக சத்தியமங்கலம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தார். அங்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி தனலட்சுமி இறந்தார்.

இதுகுறித்து பங்களாப்புதூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மேலும் செய்திகள்