< Back
மாநில செய்திகள்
தர்மபுரி
மாநில செய்திகள்
விஷம் குடித்து தொழிலாளி தற்கொலை
|21 Aug 2022 10:26 PM IST
கடத்தூர் அருகே விஷம் குடித்து தொழிலாளி தற்கொலை செய்து கொண்டார்.
மொரப்பூர்:
கடத்தூர் அருகே உள்ள லிங்கநாய்க்கனஅள்ளியை சேர்ந்தவர் ராஜா (வயது 52). தொழிலாளி. இவருக்கு மது குடிக்கும் பழக்கம் இருந்தது. நேற்று முன்தினம் வேலைக்கு சென்ற அவர் மது குடித்து விட்டு வீட்டுக்கு வந்துள்ளார். இதை குடும்பத்தினர் கண்டித்துள்ளனர். இதனால் மனமுடைந்த ராஜா விஷம் குடித்து விட்டு வீட்டில் மயங்கி கிடந்தார். அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு தர்மபுரி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்த புகாரின் பேரில் கடத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.