< Back
மாநில செய்திகள்
கிருஷ்ணகிரி
மாநில செய்திகள்
கடன் தொல்லையால் டிரைவர் தற்கொலை
|20 Aug 2022 11:07 PM IST
ஓசூர் அருகே கடன் தொல்லையால் டிரைவர் தற்கொலை செய்து கொண்டார்.
ஓசூர்:
ஓசூர் கே.சி.சி. நகரை சேர்ந்தவர் லோகேஷ் (வயது 26). வேன் டிரைவர். இந்த நிலையில் டிராவல்ஸ் தொழில் காரணமாக லோகேஷ் பலரிடம் கடன் வாங்கி இருந்தார். கடன் தொல்லை காரணமாக மனமுடைந்து காணப்பட்ட அவர் வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து ஓசூர் அட்கோ போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.