< Back
மாநில செய்திகள்
ஈரோடு லாட்ஜில் ராணுவவீரர் தூக்குப்போட்டு தற்கொலை
ஈரோடு
மாநில செய்திகள்

ஈரோடு லாட்ஜில் ராணுவவீரர் தூக்குப்போட்டு தற்கொலை

தினத்தந்தி
|
17 Aug 2022 2:37 AM IST

ஈரோடு லாட்ஜில் ராணுவவீரர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

ஈரோடு

ஈரோடு லாட்ஜில் ராணுவவீரர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

ராணுவவீரர்

கேரளா மாநிலம் திருச்சூர் கொங்கல்லூர் பகுதியை சேர்ந்தவர் சுனில்பாத் (வயது 37). ராணுவ வீரரான இவர் நேற்று முன்தினம் ஈரோட்டுக்கு வந்தார். அவர் ஈரோடு பஸ் நிலையம் அருகில் உள்ள ஒரு லாட்ஜில் அறை எடுத்து தங்கினார். நேற்று மதியம் லாட்ஜ் ஊழியர் ஒருவர் சுனில்பாத் தங்கியிருக்கும் அறை வழியாக நடந்து சென்றார். அப்போது உள்ளே எட்டி பார்த்த அவர், சுனில்பாத் தூக்கில் பிணமாக தொங்கி கொண்டு இருந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். இதையடுத்து ஈரோடு வீரப்பன்சத்திரம் போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அதன்பேரில் ஈரோடு வீரப்பன்சத்திரம் போலீசார் அங்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினார்கள். விசாரணையில், சுனில்பாத் தனது மனைவியை பிரிந்து வாழ்ந்து வருவது தெரியவந்தது.

போலீஸ் விசாரணை

தற்கொலை செய்த சுனில்பாத்தின் உடலை போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஈரோடு அரசு ஆஸ்பத்திாிக்கு அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து வீரப்பன்சத்திரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். சுனில்பாத் எதற்காக ஈரோட்டுக்கு வந்தார்? குடும்ப பிரச்சினை காரணமாக தற்கொலை செய்தாரா? அல்லது தற்கொலைக்கு வேறு காரணம் உள்ளதா? என்று தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மேலும் செய்திகள்