< Back
மாநில செய்திகள்
கிருஷ்ணகிரி
மாநில செய்திகள்
தேன்கனிக்கோட்டையில் விவசாயி தூக்குப்போட்டு தற்கொலை
|3 Aug 2022 10:17 PM IST
தேன்கனிக்கோட்டையில் விவசாயி தூக்குப்போட்டு தற்கொலை
தேன்கனிக்கோட்டை:
தேன்கனிக்கோட்டை அருகே உள்ள கொரட்டகிரி கிராமத்தை சேர்ந்தவர் மல்லேஷ் (வயது 55). விவசாயியான இவருக்கு குடிப்பழக்கம் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்த மல்லேஷ் பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றார். ஆனால் குணமடையவில்லை என தெரிகிறது. இதனால் மனமுடைந்த அவர் நேற்று முன்தினம் வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்த கொண்டார். இதுகுறித்து தேன்கனிக்கோட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.