< Back
மாநில செய்திகள்
தர்மபுரி
மாநில செய்திகள்
தொழிலாளி தற்கொலை
|2 Aug 2022 10:47 PM IST
தர்மபுரியில் தூக்குப்போட்டு தொழிலாளி தற்கொலை செய்து கொண்டார்.
தர்மபுரி குப்பாண்டி தெருவை சேர்ந்தவர் கார்த்திக் (வயது 26). தொழிலாளி. இவருக்கு திருமணம் ஆகவில்லை. இந்த நிலையில் கார்த்திக் வீட்டில் தூக்குப்போட்டு கொண்டார். இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த குடும்பத்தினர் அவரை மீட்டு தர்மபுரி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு டாக்டர்கள் பரிசோதித்தபோது அவர் ஏற்கனவே இறந்து விட்டது தெரியவந்தது. இது பற்றி தகவல் அறிந்த தர்மபுரி டவுன் போலீசார் விரைந்து வந்து கார்த்திக்கின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். அவர் தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.