< Back
மாநில செய்திகள்
திருமணமான 4 மாதத்தில் புதுப்பெண் தற்கொலை
கிருஷ்ணகிரி
மாநில செய்திகள்

திருமணமான 4 மாதத்தில் புதுப்பெண் தற்கொலை

தினத்தந்தி
|
29 July 2022 10:10 PM IST

பாகலூர் அருகே திருமணமான 4 மாதத்தில் புதுப்பெண் தற்கொலை செய்து கொண்டார்.

ஓசூர்:

ஓசூர் தாலுகா பாகலூர் அருகே உள்ள முத்தாலியை சேர்ந்தவர் சிவசங்கர். இவருடைய மனைவி வினுதா (வயது21). இவர்களுக்கு கடந்த மார்ச் மாதம் 11-ந் தேதி திருமணம் நடந்தது. இந்த நிலையில் வினுதாவிற்கு அடிக்கடி உடல் நலக்குறைவு ஏற்பட்டு வந்துள்ளது. இதனால் பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றும் குணமடையவில்லை.

இதனால் மன வேதனையில் இருந்த வினுதா நேற்று முன்தினம் வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து அவரது தாயார் லட்சுமி பாகலூர் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். திருமணம் ஆகி 4 மாதங்களில் புதுப்பெண் இறந்துள்ளதால் இது குறித்து ஓசூர் போலீஸ் துணை சூப்பிரண்டு அரவிந்த் விசாரணை நடத்தி வருகிறார்.

மேலும் செய்திகள்