< Back
மாநில செய்திகள்
பாண்டமங்கலத்தில்  பள்ளி மாணவர் தூக்குப்போட்டு தற்கொலை
நாமக்கல்
மாநில செய்திகள்

பாண்டமங்கலத்தில் பள்ளி மாணவர் தூக்குப்போட்டு தற்கொலை

தினத்தந்தி
|
16 July 2022 10:50 PM IST

பாண்டமங்கலத்தில் பள்ளி மாணவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

பரமத்திவேலூர்:

பாண்டமங்கலத்தில் பள்ளி மாணவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

10-ம் வகுப்பு மாணவர்

பரமத்திவேலூர் தாலுகா பாண்டமங்கலம் சந்தைப்பேட்டை பகுதியை சேர்ந்தவர் அரசகுமார் (வயது 45). இவர் ஜேடர்பாளையம் போலீஸ் நிலையத்தில் போலீஸ்காரராக பணியாற்றி வருகிறார். இவருடைய மனைவி சுமதி. இவர்களுக்கு பரத் (14) என்ற மகன் இருந்தார்.

இவர் பாண்டமங்கலத்தில் இருந்து கபிலர்மலை செல்லும் சாலையில் உள்ள ஒரு தனியார் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வந்தார். இந்த நிலையில் பரத் படிப்பில் கவனம் செலுத்தாததால் குறைந்த மதிப்பெண்கள் எடுத்து வந்ததாக கூறப்படுகிறது. இதனால் பெற்றோர் நன்றாக படித்து அதிக மதிப்பெண்கள் பெற வேண்டும் என கண்டித்ததாக தெரிகிறது.

விசாரணை

இதனால் மனமுடைந்த நிலையில் பரத் காணப்பட்டு வந்தார். இதற்கிடையே நேற்று காலை வழக்கம் போல் எழுந்து பார்த்தபோது பரத்தை காணவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர் மாடிக்கு சென்று பார்த்தபோது அங்குள்ள விட்டத்தில் நைலான் கயிற்றால் பரத் தூக்குப்போட்டு தொங்கி கொண்டிருந்ததை கண்டு அலறி துடித்தனர். பின்னர் மகனை மீட்டு வேலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.

அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் பரத் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதையடுத்து அவரது உடல் பிரேத பரிசோதனை கூடத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இதுகுறித்து வேலூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் வீரம்மாள் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். நன்றாக படிக்க சொல்லி பெற்றோர் திட்டியதால் மாணவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பாண்டமங்கலம் சந்தைப்பேட்டை பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.

மேலும் செய்திகள்