< Back
மாநில செய்திகள்
நாமக்கல்
மாநில செய்திகள்
புதுச்சத்திரம் அருகே கூலித்தொழிலாளி தற்கொலை
|8 July 2022 10:37 PM IST
புதுச்சத்திரம் அருகே கூலித்தொழிலாளி தற்கொலை செய்து கொண்டார்.
நாமக்கல், ஜூலை.9-
மணச்சநல்லூரை சேர்ந்தவர் சரவணன் (வயது 45). கூலித்தொழிலாளி. இவருக்கு தமிழ் செல்வி என்ற மனைவியும், ஒரு மகள், மகன் உள்ளனர். இவர் கடந்த சில ஆண்டுகளாக புதுச்சத்திரம் அருகே உள்ள கூனவேலம்பட்டி புதூரில் குடும்பத்துடன் வசித்து வந்தார். இந்தநிலையில் நேற்று வீட்டில் இருந்த சரவணன் திடீரென விஷம் குடித்தார். இதையடுத்து அவரது குடும்பத்தினர் அவரை மீட்டு ராசிபுரம் அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக அவர் சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து புதுச்சத்திரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து, அவர் எதற்காக தற்கொலை செய்து கொண்டார்? என விசாரணை நடத்தி வருகின்றனர்.